சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு

4 months ago 14

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று தி.க. மாவட்ட தலைவர் தண்டபாணி வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் பெரியார் குறித்து சீமான் தவறான தகவல்களை பரப்பி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலகத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article