சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி: அமைச்சர் ரகுபதி பேட்டி

18 hours ago 3

புதுக்கோட்டை:சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் அவர் இன்று அளித்த பேட்டி:
சீமான் மீதான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஏற்கனவே இதில் புகார்தாரராக உள்ள பெண்மணி, சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்கு பதிவு செய்து வழக்குகள் நடந்து வருகிறது.
சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்னையே கிடையாது. நாங்கள் தலையிடவில்லை. சீமான் தான் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கில் நீதிமன்றம், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறியது. நீதிமன்றம் தந்த அழுத்தத்தில் தான் இந்த வழக்கு நடக்கிறது.

இந்தியா கூட்டணியால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். இந்த கூட்டணி முன்னெடுக்கிற கொள்கை தான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிற கொள்கையாக அமையும். முதல்வர் தலைமையில் இயங்கும் இந்த கூட்டணிக்கு முழு ஆதரவையும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. ஒரு இடம் கூட குறையக்கூடாது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காக தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளோம். இது தென்னிந்திய நலனுக்காக நடத்தப்படுகின்ற அனைத்துக்கட்சி கூட்டம். தென்னிந்திய நலனில் அக்கறை இல்லாத கட்சிகள் பங்கேற்க வில்லை என்றால் கவலை இல்லை. தெலங்கானா கர்நாடகா முதல்வர்கள் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article