சென்னை: சீமானை அடையாளப்படுத்தியது பெரியார் மற்றும் அம்பேத்கரிய இயக்கங்கள்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் சென்னையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்து பயணிக்கக் கூடிய தொண்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். திராவிட அரசியல் எதிர்ப்புதான் தமிழ் தேசியம் என சீமான் முடிவு செய்தது முரண்பாடானது.
சீமானை அடையாளப்படுத்தியது பெரியார் மற்றும் அம்பேத்கரிய இயக்கங்கள்தான். தன்னுடைய நிலைப்பாட்டுக்கு பிரபாகரனை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. வெறுப்பு அணுகுமுறையால் பெரியாரின் கருத்துகளை புரிந்து கொள்ள முடியாது. இந்துமதம் ஒரு கற்பிதம்தான் எனப்தை அம்பலப்படுத்துவற்காகத்தான் பெரியார் பேசினார். பெரியார் பற்றி சீமான் அவதூறு பேசியது கண்டனத்துக்குரியது.
சீமான் முன்னிலைப்படுத்தும் எந்த தலைவர்களும் திராவிட கருத்தியலை எதிர்க்கவில்லை. சனாதன சக்திகளுக்கு துணைபோகவே சீமான் கருத்துகள் பயன்படும் என்று கூறினார்.
The post சீமானை அடையாளப்படுத்தியது பெரியார் மற்றும் அம்பேத்கரிய இயக்கங்கள்தான்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.