தேவையான பொருட்கள்
1/4கிலோ சீனி அவரைக்காய்
10சின்ன வெங்காயம்
1/2ஸ்பூன் மிளகாய் தூள்
1டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
தேவையானஅளவு உப்பு
தாளிக்க:
2ஸ்பூன் கடலை எண்ணெய்
1/2ஸ்பூன் கடுகு
1/2ஸ்பூன் உளுந்து
சிறிதளவுகறிவேப்பிலை
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சீனி அவரைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து,வர மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள சீனி அவரைக்காயை சேர்த்து 2நிமிடங்களுக்கு கிளறி விடவும்.பின் 100ml அளவு தண்ணீர் சேர்த்து, சிறு தீயில்,மூடி போட்டு வேக விடவும்.காய் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும்,மேலும் 5நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விடவும்.பின் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.சில நிமிடங்கள் கழித்து தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு,அடுப்பை அணைத்து இறக்கவும். அவ்வளவுதான். சுவையான,எல்லா குழம்பு வகைகளுக்கும் பொருத்தமான சீனி அவரைக்காய் பொரியல் ரெடி.
The post சீனி அவரைக்காய் பொரியல் appeared first on Dinakaran.