சீனாவை விட இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் 10 மடங்கு பின்தங்கி உள்ளது: ராகுல் காந்தி வேதனை

2 weeks ago 7

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் எச்.பி.சிங் என்ற பருத்தி ஜவுளி உற்பத்தி செய்யும் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலின் காணொலி காட்சிகளை ராகுல் காந்தி தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “இந்தியாவின் ஜவுளி மரபு ஒப்பிட முடியாதது.

ஒவ்வொரு 100 கிமீ தூரத்துக்கும் ஒரு புதிய ஜவுளி பாரம்பரியம், ஒரு புதிய கலை வடிவம், ஒரு புதிய கதை உள்ளது. ஆனால் நமது விவசாயிகள், தொழிலாளர்கள் குறைந்த அளவே ஊதியம் பெறுகின்றனர். ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா சீனாவை விட 10 மடங்கு பின்தங்கி உள்ளது. ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள ஒவ்வொருவருக்கும் சரியான உள்கட்டமைப்பு ஏற்படுத்தி தருதல் ஆகியவை இந்தியா மீண்டும் ஜவுளி சந்தையை கைப்பற்ற உதவும்” என வலியுறுத்தி உள்ளார்.

The post சீனாவை விட இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் 10 மடங்கு பின்தங்கி உள்ளது: ராகுல் காந்தி வேதனை appeared first on Dinakaran.

Read Entire Article