பீஜிங்,
சீனாவின் ஹூபே மாகாணம் பஹன் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று அதிகாலை ஊழியர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில், 6 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து போலீசார், மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.