சீனா ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

2 months ago 21

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-7 (9-11) என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜெசிகா பெகுலா, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தின் ஜெசிகா பெகுலா 6-7 (9-11), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

Read Entire Article