சீனா ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்

3 months ago 30

பீஜிங்,

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (8-6) என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெரும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அல்காரசும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சின்னெரை வீழ்த்தி அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Read Entire Article