சீனா ஓபன் டென்னிஸ்; கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

3 months ago 24

பீஜிங்,

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காப் (அமெரிக்கா) - பவுலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பவுலா படோசாவை வீழ்த்தி கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா - சீனாவின் கின்வென் ஷெங் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினா முச்சோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் கின்வென் ஷெங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப் - கரோலினா முச்சோவா ஆகியோர் மோத உள்ளனர்.

Read Entire Article