சீனா ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன்

7 months ago 35

பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா (28 வயது, 49வது ரேங்க்) உடன் நேற்று மோதிய கோகோ காஃப் (20 வயது, 6வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார்.

இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சீனா ஓபனில் பட்டம் வென்ற 2வது அமெரிக்க வீராங்கனை என்ற பெருமை கோகோவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, செரீனா வில்லியம்ஸ் 2004 மற்றும் 2013ல் இங்கு கோப்பையை வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக கோகோ வென்ற 8வது பட்டம் இது.

The post சீனா ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன் appeared first on Dinakaran.

Read Entire Article