புதுடெல்லி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணத்தை கடந்த 2022ம் ஆண்டு ராகுல் காந்தி மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது 2022ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘நாட்டின் எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து விட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது’ என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு ராணுவ தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்பி -எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, எல்லை சாலைகள் அமைப்பான பிஆர்ஓவின் முன்னாள் இயக்குநர் சங்கர் வத்சவா தொடர்ந்திருந்தார். அதில், ‘ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது’ என சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 24ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
The post சீனா ஆக்கிரமிப்பு குறித்த விமர்சனம்: லக்னோ நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்திக்கு சம்மன் appeared first on Dinakaran.