பெய்ஜிங்: சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1921ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி நிறுவப்பட்டது. தற்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வருகின்றது. இந்த கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையானது 10கோடியை கடந்துள்ளதாக கட்சியின் மத்திய அமைப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 2024ம் ஆண்டு இறுதியில் 10.27கோடிக்கும் அதிகமாக இருந்தது. இது 2023ம் ஆண்டைக் காட்டிலும் சுமார் 10.9 லட்சம் அதிகமாகும். இது 2024ம் ஆண்டின் முடிவில் 50.25லட்சம் பிரைமரி அளவிலான அமைப்புக்களை கொண்டு இருந்தது.
இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 74ஆயிரம் அதிமாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் 2.42கோடி விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தது- இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 440000 விண்ணப்பங்கள் கூடுதலாகும். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் சுமார் 3.1கோடி பெண் உறுப்பினர்கள் உள்ளனர் . இது மொத்த உறுப்பினர்களில் 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. உறுப்பினர்கள் தங்களது மாதாந்திர வருமானத்தில் 2 சதவீதம் வரை உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.
The post சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது appeared first on Dinakaran.