ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், இறப்பும் பதிவு செய்வது தலையாய கடமை. ஆனால் பிறப்பு, இறப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் மிக முக்கிய நிகழ்வும் கூட. போலவே இவ்விரண்டையும் நாம் தனி ஒருவராக பதிந்து கொள்ள முடியாது. நம் குடும்பத்தார் மட்டுமே பதிவு செய்திட முடியும். என்கையில் நிகழும் சம்பவத்திற்கு இடையே இந்த பதிவு செய்யும் வேலையும் வீட்டாரை இழுத்தடித்து நேரத்தைக் கடத்தும். அதற்குதான் வரவிருக்கிறது மத்திய அரசின் புதிய செயலி. பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோரால், பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்டவற்றை பதிவு செய்வதற்காக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வதற்கான நேரம் குறைகிறது என்று தெரிவித்துள்ளனர்.
The post சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் appeared first on Dinakaran.