சிவா நடித்த "சுமோ" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

6 days ago 7

சென்னை,

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இயக்குனர் ஹோசிமின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டே இப்படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. 'சுமோ' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை.

இந்நிலையில், இப்படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது,

No Need to Fasten Seat Belts, Just Chill, Relax and Enjoy Summer's Feel-Good Entertainer #Sumo Releasing on April 25! X @IshariKGanesh @VelsFilmIntl@actorshiva @priyaanand @DirRajivMenon @sphosimin @cinemainmygenes @nivaskprasanna @Ashkum19 @RIAZthebosspic.twitter.com/ccqkvDR2Qr

— Vels Film International (@VelsFilmIntl) April 4, 2025
Read Entire Article