விளாத்திகுளம், ஜன. 14: விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார். விளாத்திகுளம் வட்டம், சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.நிகழ்ச்சியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு இடைநிலைக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கண்ணன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியை மாயா முன்னிலை வகித்தார்.விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,ஆதிசங்கர், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உட்பட ஆசிரிய – ஆசிரியைகள் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post சிவஞானபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.