சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி

6 months ago 44
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநகராட்சி நிர்வாகமும், வாரியர்ஸ் கூடைப்பந்து அகடாமியும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக காவல்துறை அணி வெற்றி பெற்றது. சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், சேலம், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 அணிகள் போட்டியில் பங்கேற்ற நிலையில் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் கூடைப்பந்து கழக அணியை 56க்கு 50 என்ற புள்ளி கணக்கில் தமிழக காவல்துறை அணி வீழ்த்தியது. வெற்றி பெற்ற தமிழக காவல்துறை அணிக்கு சிவகாசி மேயர் சங்கீதா பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கி பாராட்டினார்.
Read Entire Article