சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

6 months ago 23
சிவகாசி பேருந்து நிலையம் அருகே புதுத்தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த காளிராஜன் தனது மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தவர்கள், தூக்கி எறிந்த பட்டாசின் தீப்பொறி, இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசுகளில் பட்டு,  தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் சேதமடைந்து, மருமகன் வசந்த குமார் லேசான தீக்காயமடைந்த நிலையில்  காளிராஜன் 90% தீக்காயத்துடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article