சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு, 7 பேர் காயம்

7 hours ago 2

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட வெடி விபத்தில் அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில், 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

Read Entire Article