சிவகங்கையில் மக்கள் குறைதீர் நாள்: 291 மனுக்கள் பெறப்பட்டன

1 month ago 5

 

சிவகங்கை, நவ. 19: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாளில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 291 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார்.

இதில் காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி பகுதிகளை சேர்ந்த பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்சாரம தாக்கி இறந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் மக்கள் குறைதீர் நாள்: 291 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Read Entire Article