சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டிய தேவை எழவில்லை: அமைச்சர் ரகுபதி

2 days ago 3

சென்னை,

தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி துவக்க அரசு ஆவண செய்யுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 12 தனியார் சட்டக் கல்லூரிகளும் உள்ளது. 48,550 மாணவர்கள் அரசு சட்டக்கல்லூரி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

வழக்கறிஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தற்காலிகமாக சட்டக்கல்லூரி துவங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிதிநிலைக்கு ஏற்ப அரசு புதிய சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து முடிவு செய்யும் என்று பதில் அளித்தார்.

சிவகங்கை:-

சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என்று சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ரகுபதி, காரைக்குடியில் சட்டக் கல்லூரி கட்டப்பட்டுவருகிறது. மேலும் அழகப்பாக கல்லூரியில் சட்டக் கல்லூரி உள்ளது. எனவே சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்று பதில் அளித்தார்.

வழக்கறிஞர் ஸ்டாம்பு:-

வழக்கறிஞர் ஸ்டாம்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சேம நல நிதியும் உயர்த்தப்படுமா என்று உறுப்பினர் செந்தில்நாதன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, வழக்கறிஞர் ஸ்டாம்ப் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பார் கவுனசில் மற்றும் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களில் ஒப்புதல் உடன் தான் இந்த ஸ்டாம்ப் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பதில் அளித்தார்

Read Entire Article