சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், அங்கு நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவர் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் . இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் .மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியியிலும் அவர் பங்கேற்கிறார் .