சில்லிபாயிண்ட்…

3 months ago 23

* காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் இன்று தொடங்கும் முதல் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* வெஸ்ட் இண்டீஸ் அணி நட்சத்திர வீரர்கள் ஆந்த்ரே ரஸ்ஸல், நிகோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மயர், அகீல் உசைன் ஆகியோர் இலங்கையுடன் நடக்க உள்ள டி20 தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ் (துணை கேப்டன்), பேபியன் ஆலன், ஆலிக் அதனேஸ், ஆந்த்ரே பிளெட்சர், டெரன்ஸ் ஹைண்ட்ஸ், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோத்தி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஷமார் ஸ்பிரிங்கர்.

* மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பேட் செய்தபோது, இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கழுத்தில் காயம் ஏற்பட்டது. வெற்றிக்கு இன்னும் 2 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஸ்டம்பிங் வாய்ப்பை தவிர்க்க முயற்சித்த ஹர்மன்பிரீத் காயத்தால் வெளியேறினார். அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Read Entire Article