சில்லரை விற்பனையாளர்கள் உரங்களை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

3 months ago 21

புதுக்கோட்டை, அக்.4: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பயிர் சாகுபடிக்குதேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுவிநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில்லரைவிற்பனையாளர்கள் உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்டவேளாண்மை இணை இயக்குநர்(பொ) திரு. வி.எம். ரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா நெல் சாகுபடி, மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, கரும்பு, தென்னை, காய்கறிகள், மா, வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகியபயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சாகுபடிசெய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்களானயூரியா 5459 மெட்ரிக் டன்கள், டிஏபி 1132 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 838 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 4727 மெட்ரிக் டன்கள், சூப்பர் பாஸ்பேட் 872 மெட்ரிக் டன்கள் ஆகியன தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டுவிநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மொத்த மற்றும்சில்லரை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களைபிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிறமாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. மேலும், இது தொடர்பான ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ அல்லதுபுகார் ஏதும் பெறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள்கவனத்திற்கு
உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்றநிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்றஇடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திடவேண்டும். உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களைகொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும்கூடாது. உர மூட்டையின்மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்குமேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபரபலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்துதினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனைசெய்திட வேண்டும். விற்பனை முனையக் கருவியில் உள்ளஇருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்குமாறு உர இருப்புவிவரத்தினை பராமரித்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்துவிற்பனை செய்யக்கூடாது.

தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல்கூடாது. மேலும், மாவட்டத்தில் உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வுமேற்கொள்ளும் பொழுது, உரங்களை, அதிக விலைக்கு விற்பனைசெய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களைவிற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில்ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அத்தியாவாசிய பண்டங்கள் சட்டம்1955, உரக்கட்டுபாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டுஆணை 1973 ஆகியவற்றின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்எனவும், மீறினால் உர உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post சில்லரை விற்பனையாளர்கள் உரங்களை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article