சில்குர் பாலாஜி கோவிலில் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம்

3 hours ago 1

சென்னை,

2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. பின்னர் பாலிவுட் நடிகையாக உயர்ந்த இவர், ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். 

இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாதநிலையில், சமீபத்தில் அவர் ஐதராபாத் வந்தது இதற்கு மேலும் வலிமை சேர்த்தது.

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள சில்குர் பாலாஜி கோவிலில் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Read Entire Article