சிலை கடத்தல் வழக்கு பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு

5 months ago 33

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலின் கோரிக்கையை ஐகோர்ட் கிளை நிராகரித்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது, சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஐகோர்ட் கிளை பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதில், சென்னை சிபிஐ அலுவலகத்தில் 4 வாரத்திற்கு தினசரி காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன் மாணிக்கவேல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நீதிமன்ற நிபந்தனை காலமான 4 வாரம் இன்னும் முடியவில்லை. எனவே, மனுதாரரின் ேகாரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனு மீதான விசாரணையை வருகிற 14ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

The post சிலை கடத்தல் வழக்கு பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article