புதுடெல்லி: தமிழ்நாடு முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் மாயமானதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘இந்த வழக்கை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.
அப்போது மாநில உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, 41 சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை என்ன என்பது குறித்த விவரங்களை பிரமாணபத்திரம் தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post சிலை கடத்தல் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.