சிறையில் உள்ள பிரபல தாதாவான லாரன்சை சுட்டுக் கொல்லும் போலீசுக்கு ரூ.1 கோடி வெகுமதி: வலதுசாரி அமைப்பு அறிவிப்பு

3 weeks ago 4

புதுடெல்லி: சிறையில் உள்ள பிரபல தாதாவான லாரன்சை சுட்டுக் கொல்லும் போலீசுக்கு ரூ.1 கோடி வெகுமதி அளிக்கப்படும் என்று வலதுசாரி அமைப்பு அறிவித்துள்ளது. குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அவ்வப்போது பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தில் லாரன்ஸ் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாபா சித்திக்கின் நண்பரான பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் லாரன்ஸ் கும்பலால் அவ்வப்போது கொலை மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த வலதுசாரி அமைப்பான க்ஷத்ரிய கர்னி சேனாவெளியிட்ட தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் அறிவிப்பில், ‘லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லும் போலீஸ்காரருக்கு ரூ.1 கோடிக்கு மேல் பரிசு வழங்கப்படும்.

அதாவது லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரிக்கும் 1,11,11,111 ரூபாய் வெகுமதி வழங்கப்படும்’ என்றார். முன்னதாக கடந்த 2023 டிசம்பரில் ராஜஸ்தானில் கர்னி சேனாவின் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. அதனால் லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என க்ஷத்ரிய கர்னி சேனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சிறையில் உள்ள பிரபல தாதாவான லாரன்சை சுட்டுக் கொல்லும் போலீசுக்கு ரூ.1 கோடி வெகுமதி: வலதுசாரி அமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article