
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் இளம்பெண் வசித்து வந்தார். அந்த இளம்பெண் அதே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், நடந்த சம்பவம் குறித்து யாரிடம் கூறக்கூடாது என்றும் சிறுவனை இளம்பெண் மிரட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக சிறுவன் மிகுந்த மன உளைச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறுவனிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது பக்கத்து குடியிருப்பை சேர்ந்த இளம்பெண் தன்னுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும், இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டியதாக சிறுவன் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது