கேரளாவில் 2 நாட்களில் யானை தாக்கி 3 பேர் பலி – வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்

3 hours ago 2

 வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு அருகே அட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீட்டு பொருட்கள் வாங்க சென்ற பாலகிருஷ்ணன் (27) என்ற இளைஞரை காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுபோன்று அதே நாளில் நூல் புழை பகுதியில் மனு என்பவரை யானை தாக்கி கொன்றது.

மேலும் இடுக்கி முண்டகாயம் பகுதியில் சோபியா (45) என்பவர் கடந்த பிப்.10ஆம் தேதி காட்டு யானை தாக்கி பலியானார். கடந்த இரண்டு வாரத்தில் யானை தாக்கி கேரள மாநிலத்தில் 3 பேர் பலியான நிலையில், வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க கேட்டு இன்று வயநாடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த போராட்டம் இன்று(13.02.2025) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகளில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பேருந்துகளை தடுத்து நிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால் வயநாடு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

காட்டு யானைகள் பல நாட்களாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதாகவும், வனத்துறையினர் இதை தடுக்கவும், யானைகளை காட்டுக்குள் விரட்டவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Read Entire Article