சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவதூறு பரப்பியதால் விரக்தி - வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை

3 months ago 26

புதுக்கோட்டை,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தன்மீது அவதூறு பரப்பி விட்டதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ். இவர் சில நாட்களாக வெளியூர் சென்றிருந்தபோது, ராஜா என்பவர் பிரகாஷ் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பிரகாஷ் ஊருக்குள் வருவதற்கு அவமானமாக இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து பகுதியில் உள்ள மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோவில் பிரகாஷ், "குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக ஊர் முழுக்க தன்னைப் பற்றி ராஜா என்பவர் அவதூறு பரப்பியுள்ளார். என்னை ஊருக்குள் செல்ல முடியாத நிலைக்கு தள்ளி விட்டனர். என் சாவுக்கு ராஜா என்பவர்தான் காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் குடும்பத்தினர் ராஜாவை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article