சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

2 months ago 19


திருத்தணி: திருத்தணி அருகே, பட்டாபிராமாபுரம் ஊராட்சி மேல் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய பெருமாள் என்பவரின் மகன் சரவெடி சரத்(எ)சரத்குமார்(28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த 6ம் வகுப்பு படித்து வரும் சிறுமி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சரத்குமார் சிறுமியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மலர் தலைமுறைவாக இருந்த சரவெடி சரத்(எ)சரத்குமாரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article