சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதானவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

6 months ago 15

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மாரிமுத்து என்பவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அக்டோர் 18ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேங்கட கிருஷ்ணன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாய் உள்நோக்கத்துடன் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்து நீண்ட நாட்களுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயாருக்கும் மனுதாரர் மாரிமுத்துவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வழங்கல் பிரச்னை நீண்டகாலமாக இருந்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். அரசு தரப்பில், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், மாரிமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிபடுத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியம் மற்றும் ஆவணங்களில் முரண்பாடு உள்ளது. அதனால், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்றத்தில் மாதம் ஒரு நாள் மனுதாரர் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆதார், வங்கி பாஸ்புக் போன்ற விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கான இருநபர் உத்திரவாதத்தை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதானவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article