சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

3 months ago 21

புழல்: மாதவரம் பாரதியார் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேந்தர் (53, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 2வது மனைவி மல்லிகா (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர்களது மகன் சிவக்குமார் (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் மல்லிகாவின் முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகளுடன் 7 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து, இடையில் நின்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை தாயின் 2வது கணவர் சுரேந்திரன், மகன் சிவக்குமார் ஆகியோர் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாற்றப்பட்டு விசாரணை நடத்தியதில், இவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதற்கு உடந்தையாக சிறுமியின் தாயும் இருந்துள்ளார். எனவே இவர்கள் மூன்று பேரையும் கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

 

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article