சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

2 months ago 13

 

கரூர், டிச. 18: வெள்ளியணை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபருக்கு கரூர் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள மணவாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(50). இதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவரிடம் இவர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவி தனது தாயாரிடம் இந்த நிகழ்வு குறித்து கூறியுள்ளார்.

இதனடிப்படையில், தாயார் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்வராஜ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Read Entire Article