நாகர்கோவில்: காதலிக்க மறுத்த சிறுமியை பழிவாங்குவதற்காக தனது நண்பர்கள் மூலம் ஆபாச வீடியோவை சிறுமிக்கு அனுப்ப வைத்து டார்ச்சர் செய்த பள்ளி மாணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள வெள்ளறடை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவியை அதே பள்ளியில் பிளஸ்1 படிக்கும் 16 வயது மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவர், மாணவியிடம் காதலை கூறியபோது அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த அவர், நண்பர்களான சஜின் (29), அனந்து (20) ஆகியோரிடம் இந்த விஷயத்தை கூறி ஆதங்கப்பட்டுள்ளார். இதனால் 3 பேரும் சேர்ந்து மாணவியை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.
மாணவிக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நாள் முழுவதும் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை செல்போனில் அனுப்புமாறு வாலிபர்களிடம் அந்த மாணவர் கேட்டுள்ளார். இதற்கு கூலியாக 2 பேருக்கும் மது, கேரள புட்டு உள்ளிட்டவற்றை மாணவர் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து சஜின், அனந்து ஆகியோர் பல்வேறு நம்பர்களில் இருந்து மாணவிக்கு ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்களை அனுப்பி தொந்தரவு செய்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து வெள்ளறடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மாணவிக்கு ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பிய சஜின் மற்றும் அனந்து ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாணையில் அடிப்படையில் போலீசார் வழக்கில் தொடர்புடைய பிளஸ் 1 மாணவனையும் கைது செய்தனர். பின்னர் மாணவனை திருவனந்தபுரத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
The post சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்: பள்ளி மாணவன் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.