சிறுநீரகக் கற்களை உடைக்கும் நெருஞ்சி!

3 months ago 11

நன்றி குங்குமம் தோழி

வரப்பு ஓரங்களிலும், வேலிப் புதர்களிலும் மிகச் சாதாரணமாக தென்படும் நோய் தீர்க்கும் மூலிகைகளுள் ஒன்று நெருஞ்சி. சாதாரணமாக கோடையில் வரும் நீர்ச் சுருக்குக்கு நெருஞ்சி முள்ளை ஒன்றிரண்டாக இடித்துத் தேநீர் வைப்பது போல் கஷாயமிட்டு காலை, மாலை என 5 நாட்கள் குடித்து வந்தால் நீர்ச்சுருக்கு குணமாகும்.மேகச் சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு நெருஞ்சி முள் மற்றும் அதன் வேரைப் பச்சரிசியுடன் சேர்த்து வேகவைத்து, வடித்துக் கஞ்சியாகக் கொடுக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சூதகப் பாதையில் ஏற்படும் சுழற்சிக்கும் நெருஞ்சிக் கஷாயம் பயன் அளிக்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு நெருஞ்சி ஒரு சிறந்த மருந்து. நெருஞ்சி, நீர் முள்ளிச்செடி, மாவிலங்கப்பட்டை, சிறு கண்பீளைச் செடி இந்த நான்கையும் சம பங்கு எடுத்து, 400 மில்லி நீர் ஊற்றி, 60 மில்லியாகக் குறுக்கிக் காய்ச்சி வடித்து காலை, மாலை என இருவேளை 45 நாட்கள் கொடுத்து வந்தால் கற்கள் உடைந்து விடும்.

நெருஞ்சி, சீந்திற்கொடி, அமுக்கிராக் கிழங்கு, நெல்லி முள்ளி இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து, அவைகளை ஒன்றிரண்டாக தட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மில்லி தண்ணீர் விட்டு, 100 மில்லிச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை 1 அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் வாத நோய் குணமாகும்.

தொகுப்பு: பி.தீபா, கிருஷ்ணகிரி.

The post சிறுநீரகக் கற்களை உடைக்கும் நெருஞ்சி! appeared first on Dinakaran.

Read Entire Article