பொன்னேரி: பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம், கடப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறு பழவேற்காடு கிராமத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் முரளிதரன், திருவெள்ளைவாயல் லோகநாதன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜெயசீலன், கடப்பாக்கம் ஊராட்சி திமுக கிளைச் செயலாளர் தினேஷ்குமார், நாகலிங்கம், கோவிந்தன், முத்து, முருகன், ஏகாம்பரம், ஆதிகேசவன், ராஜேந்திரன், ஒப்பந்ததாரர் அபிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் முன்னாள் வார்டு உறுப்பினர் ராஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
The post சிறு பழவேற்காடு கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.