சிறந்த வெப் சீரிஸுக்கான விருதை வென்ற 'பாராசூட்'

4 hours ago 1

சென்னை,

இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான வெப் சீரிஸ் 'பாராசூட்'. இதில் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை கனி, கிருஷ்ணா குலசேகரன், காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், செல்லதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.யில் வெளியான இந்த வெப் சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ப்ரோவோக் லைப்ஸ்டைல் 2025 விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் கிருஷ்ணா தாயரித்த 'பாராசூட்', சிறந்த வெப் சீரிஸுக்கான விருதை வென்றுள்ளது. மேலும் அதில் நடித்த இரண்டு குழந்தைகளுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

Read Entire Article