சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

4 hours ago 2

டமாஸ்கஸ்,

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று மதியம் விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அந்த வானத்தின் அருகே இருந்த நின்றுகொண்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் திடீரென வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், சிரியா கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.  

Read Entire Article