சிராயன்குழியில் கழிவுநீர் ஓடையாக மாறிய சிற்றாறு பட்டணம் கால்வாய்

2 months ago 10

சுவாமியார்மடம் : சுவாமியார்மடம் அடுத்த சிராயன்குழி வழியாக சிற்றாறு பட்டணம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் புதர்மண்டி, குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இது குறித்து பொதுமக்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயின் இரு பக்கங்களிலும் நிறைந்து காணப்பட்ட புதர்கள் மற்றும் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இந்நிலையில் தற்போது மீண்டும் கால்வாய் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் நிறைந்து கழிவுநீர் ஓடைபோல் காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்புகள், வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள் நிறுத்தும் இடம் என எப்போதும் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இந்த பகுதியில், கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் குப்பைகளை நீர்நிலைகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிராயன்குழியில் கழிவுநீர் ஓடையாக மாறிய சிற்றாறு பட்டணம் கால்வாய் appeared first on Dinakaran.

Read Entire Article