சிரஞ்சீவி படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியை முடித்த அனில் ரவிபுடி?

4 hours ago 2

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்தது. .

இப்படத்தையடுத்து அனில் ரவிபுடி, சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ஷைன் ஸ்கிரீன்ஸ் சினிமாவின் சாஹு கரபதி தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், சிரஞ்சீவி படத்திற்கான ஸ்கிரிப்டை அனில் ரவிபுடி முடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கடந்த சனிக்கிழமை, அவரும் இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோவும் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் கோவிலுக்குச் சென்று படத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் எனவும், கதாநாயகியாக அதிதி ராவ் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article