சிப்பிங் நிறுவன ஊழியரை குத்திய வாலிபர்கள் கைது

3 months ago 14

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகேயுள்ள புல்லாவளி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் சரவணகுமார் (39). தூத்துக்குடியில் உள்ள சிப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், கடந்த 8ம் தேதி அதிகாலை டீ குடிப்பதற்காக முள்ளக்காடு அருகே பொட்டல்விலக்கு பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். செல்லும் வழியில் இருளில் பதுங்கியிருந்த வாலிபர்கள் 2 பேர், சரவணகுமாரை மறித்து தீப்பெட்டி தருமாறு கேட்டனர். அப்போது அவர் தன்னிடம் தீப்பெட்டி இல்லை என தெரிவித்தநிலையில், வாலிபர்கள் 2 பேரும், பிரபல ரவுடியின் பெயரை கூறி அவரை உனக்குத் தெரியுமா? என கேட்டு மிரட்டல் விடுத்ததுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த சரவணகுமார், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் எஸ்.ஐ.ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமலதா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டது தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ஞானமுத்துவின் மகன் ஸ்டீபன்ராஜ் (22), முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த செந்தில்வேலின் மகன் பிரேம்குமார் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

The post சிப்பிங் நிறுவன ஊழியரை குத்திய வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article