சிபிசிஎல் நிறுவனத்தால் ஏற்பட்ட எண்ணூர் எண்ணெய் கசிவு பாதிப்புகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

4 weeks ago 5

புதுடெல்லி: ஒன்றிய எரிசக்தித்துறை அமைச்சகத்திடம் மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:

* எண்ணூர் எண்ணெய்க் கசிவால், ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் (சிபிசிஎல்) ஒன்றிய அரசும் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

* எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களை, குறிப்பாக சதுப்புநில காடுகள் மற்றும் ஏரிப்பகுதிகளை அப்பாதிப்பிலிருந்து மீட்டு மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படிசிபிசிஎல் நிறுவனம் பின்பற்றுகின்ற வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

* இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கவும், ஒருவேளை நிகழ்ந்தால், அதனை திறம்பட கையாளவும், சிபிசிஎல்நிறுவனத்திடம் பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?

* எண்ணெய் கசிந்த இடங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பைச் சரிசெய்ய சிபிசிஎல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவ்வப்போது மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படைத்தன்மையோடு அந்நிறுவனம் வழங்குகிறதா?

* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் சிபிசிஎல் முறையாக பின்பற்றுகிறதா?

* இந்த எண்ணெய் கசிவினால் ஏற்பட்ட சமூக – பொருளாதார சேதங்கள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டவைகளை சரிசெய்ய சிபிசிஎல் ஏதேனும் திட்டங்கள் வைத்துள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார்.

The post சிபிசிஎல் நிறுவனத்தால் ஏற்பட்ட எண்ணூர் எண்ணெய் கசிவு பாதிப்புகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article