சிபிஎஸ்சிஇ பொதுத்தேர்வு துவக்கம் காரணமாக சேதுபாவாசத்திரத்தில் இன்று மின்நிறுத்தம் ‘வாபஸ்’

3 months ago 9

 

பேராவூரணி, பிப்.15: சேதுபாவாசத்திரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று அறிவிக்கப்பட்ட மின்நிறுத்தம், சிபிஎஸ்பிஇ பொதுத்தேர்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், நாடியம், குப்பத்தேவன், திருவதேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோ ட்டை, ஆதனூர்,ஆத்தாளூர் ,

பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் மின்தடை ஏற்படும் என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் அறிவித்திருந்தார். இன்று சனிக்கிழமை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதால் மாணவர்களின் நலன் கருதி மின்தடை வாபஸ் பெறப்பட்டு, பின்னர் மறுதேதி அறிவிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

The post சிபிஎஸ்சிஇ பொதுத்தேர்வு துவக்கம் காரணமாக சேதுபாவாசத்திரத்தில் இன்று மின்நிறுத்தம் ‘வாபஸ்’ appeared first on Dinakaran.

Read Entire Article