சிபிஎஸ்இ-யின் ஃபெயில் நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அன்பில் மகேஸ்

1 week ago 3

திருச்சி: “5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்.” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் உள்ளன. மேலும் அத்தேர்வுகளில் குழந்தைகள் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் எடுக்காவிட்டால் ஃபெயில் ஆக்கவும் வழிமுறை உள்ளது. இது, குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும்.

Read Entire Article