
புதுடெல்லி,
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்காக மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 8 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். சுமார் 44 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதையடுத்து இன்று முதல் தேர்வானது தொடங்க உள்ளது.