
டெல்லி,
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி நேபாளம், ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் இருந்து மாணவ, மாணவியர் சிபிஎஸ்இ தேர்வு எழுதுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 ஆயிரத்து 842 மையங்களும், வெளிநாடுகளில் 26 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகளை 24 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அதேபோல், 12ம் வகுப்பு தேர்வுகளை 17 லட்சத்து 88 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.