
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் இத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் அனைவரும் பதட்டமின்றி, வினாக்களை நன்றாகப் படித்து புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தெளிவாக விடைகளை எழுத வேண்டும். வெற்றியும், சாதனைகளும் உங்கள் பக்கமே! வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது