சின்னத்திரை நடிகையை பலாத்காரம் செய்த காதலன் கைது

1 month ago 5

வளசரவாக்கம்: சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சின்னத்திரை இளம் நடிகை ஒருவர் கொடுத்துள்ள புகாரில், ‘என்னை ஒருவர் திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பணம், நகை, லேப்டாப்பை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, எனது காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி வழக்குபதிவு செய்து நடிகையிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, ‘‘ஒருநாள் சந்தோஷின் செல்போனை சோதனை செய்தபோது பல பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் ஆபாச வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்னை வீட்டுக்குள் புகுந்து என்னை சரமாரியாக தாக்கியதுடன் பலாத்காரம் செய்து பணம், நகைகள், லேப்டாப் ஆகியவற்றை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார் என தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து சந்தோஷ் மீது பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பண மோசடி உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னத்திரை நடிகையை பலாத்காரம் செய்த காதலன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article