சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

3 months ago 14

போரூர்: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து ஹேம்நாத் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு appeared first on Dinakaran.

Read Entire Article